கடந்த 2023-ம் ஆண்டு முதல் நீடித்து வந்த தூதரக மோதல்களை கடந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகள் தங்களது உறவை சீரமைக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
ஒட்டாவாவில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் கனடா பாதுகாப்பு ஆலோசகர் நத்தலி ட்ரூயின் ஆகியோர் எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ‘கூட்டுச் செயல் திட்டத்தை’ வகுத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் காலத்தில் இந்தியா – கனடா உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைச் சந்தித்தது.
ஆனால், தற்போது கனடாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளும் உறவை மேம்படுத்தத் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்க இந்தியா -கனடா உடன்பாடு
