சீன-அமெரிக்க தொழில் நிறுவனங்களின் பயனுள்ள ஒத்துழைப்பு

Estimated read time 1 min read

சீன-அமெரிக்க வணிகப் பொருத்தத் திட்டத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு பிப்ரவரி 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில், சீனாவுக்கான அமெரிக்கத் தூதரகம் முதலியவை இந்நிகழ்வை ஏற்பாடு செய்தன. இந்நிகழ்வில் இரு நாட்டுத் தொழில் மற்றும் வணிக துறையைச் சேர்ந்த 250க்கும் மேலான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சீனாவுக்கான அமெரிக்க வர்த்தகச் சபையின் தலைவர் மைக்கேல் ஹார்ட் கூறுகையில், நாம் ஆண்டுதோறும் நடத்திய வணிகச் சூழ்நிலை பற்றிய கணக்கெடுப்பின்படி, 2026ஆம் ஆண்டு, சீனாவிலுள்ள அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சீனச் சந்தையில் வாய்ப்புகள் நிறைந்துள்ளன என்று அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் கருதுவதாகவும்,  தங்களின் சீன அலுவலகம் இலாபம் அடைந்துள்ளதாக 50 விழுக்காட்டுக்கும் மேலான தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சிலின் தொழில் முன்னேற்றப் பிரிவின் துணைத் தலைவர் லீ சியாங் கூறுகையில், பசுமை மற்றும் கார்பன் குறைவு, இருப்புப்பாதைப் போக்குவரத்து, நிதி மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்றார். அதோடு, இரு நாட்டுத் தொழில் நிறுவனங்கள் முன்பதிவுகளைப் பெற்று, பயனுள்ள சாதனைகளையும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author