வந்த விழா, சீனாவின் மிகப் பிரமாண்டமான, பிரதிநிதித்துவம் வாய்ந்த பாரம்பரிய விழாவாகும். 2024ஆம் ஆண்டின் இறுதியில், வசந்த விழா, ஐ.நா யுனிஸ்கோவின் அருவுமான கலாச்சார பாரங்பரியங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது சீனாவின் வசந்த விழாவானது, சீனத் தேசிய இன விழா என்னும் நிலையில் இருந்து உலகப் பண்பாட்டு சின்னமாக மாறியுள்ளது.
2026ஆம் ஆண்டின் வசந்த விழா நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவுக்கு வருகை தரும் விமான பதிவு எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4 மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது. இதில், ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து சீனாவுக்கு வரும் விமானப் பதிவுகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது.
சீனப் பண்பாட்டில், குதிரை என்பது சுறுசுறுப்புடன் உழைத்தல், சுய வலிமைக்காக விடா முயற்சியுடன் செயல்படும் எழுச்சியை வெளிக்காட்டும் விலங்காகும்.
வெளிநாட்டவர்கள் வசந்த விழாவைச் சீனாவில் கொண்டாட விரும்புவதென்பது புதிய போக்காக மாறியுள்ளது. இதன் மூலம் மேலதிகமான வெளிநாட்டவர்கள் சீன மதிப்பு, சீனாவின் கருத்துக்கள், கண்ணோட்டங்கள் முதலியவற்றை மேலதிகமாகப் புரிந்துகொண்டு ரசிக்கின்றனர். சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதோடு, சீனப் பண்பாட்டை ரசித்து அறிந்துகொள்ளலாம்.
இதனிடையில் பிரிட்டனின் பிராண்ட் நிதி நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, சீனாவின் மென்னாற்றலுக்கான பல மதிப்பீட்டின் குறிக்கோள்கள் உலகளவில் முதலிடத்தில் உள்ளன. விழுமியம், ஆட்சிமுறை, தொடரவல்ல எதிர்காலம் முதலியவற்றின் இடங்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையை வகித்து வருகின்றன.
