வியட்நாமுடனான உறவுக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது: ஷிச்சின்பிங்

Estimated read time 0 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் பிப்ரவரி 4ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரின் சிறப்புத் தூதரும் வெளியுறவு அமைச்சருமான லெ ஹொய் ட்ரங்குடன் சந்திப்பு நடத்தினார்.

ஷிச்சின்பிங் பேசுகையில், சீனாவும் வியட்நாமும் சோஷலிச வளர்ச்சியின் பல்வேறு துறைகளிலும் வலுவான முன்னேற்றம் அடைந்து, உலகிற்கு சோஷலிச அமைப்பு முறையின் உயிராற்றலை வெளிக்காட்டியுள்ளன என்றும், வியட்நாமுடன் இணைந்து இருநாடுகளின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னெடுத்துச் செல்ல சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

சீனாவுடன் உறவுகளை வளர்ப்பதை தூதாண்மை கொள்கையில் மிகப்பெரிய முன்னுரிமையாகக் கடைப்பிடித்து வரும் வியட்நாம், சீனாவுடன் இணைந்து புதிய வளர்ச்சிப் பாதையில் கூட்டாக பயணிக்கவும், இருநாட்டுறவை புதிய நிலைக்குக் கொண்டு சென்று இருநாட்டு மக்களுக்கு மேலதிக நன்மை பயக்கவும் விரும்புவதாக லெ ஹொய் ட்ரங் கூறினார்.

You May Also Like

More From Author