பயணிகள் கவனத்திற்கு! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடையில் மாற்றம்

Estimated read time 1 min read

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக 10, 11 நடைமேடைகளில் இயங்கும் புறநகர் ரயில்கள் வரும் பிப்.20 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு 5 மற்றும் 6வது நடை மேடைகளில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் பிப்ரவரி 20 பிப்ரவரி முதல் 05 ஏப்ரல் 2026 வரை மின்சார ரயில் (EMU) இயக்கத்தில் செய்யப்பட்டுள்ள தற்காலிக மாற்றங்கள் குறித்து சென்னை பூங்கா நகரில் உள்ள ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது என கூறிய அவர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக நடைமேடை 10 மற்றும் 11ல் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் வரும் 20 தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைமேடை 5 மற்றும் 6 இயக்கப்படும் என்றார்.

மேலும் பேசிய அவர் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் விரைவு ரயிகள் இயக்கப்படும் நடைமேடை 6 லிலும் , செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் நடைமேடை 5 லிலும் இயக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ஞாயிற்றுக்கிழமை உட்பட இடைப்பட்ட பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தெற்கு ரயில்வேயில் தற்காலிக அட்டவணைப்படி மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார். மின்சார ரயில்கள் விரைவுப் பாதையில் இருந்து இயக்கப்பட உள்ளன என கூறிய அவர் ரயில் எண்கள் மற்றும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 84 ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும் 80 ரயில்கள் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெற்று இறுதியில் தொடங்கும், விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author