பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள வசந்த விழா கலை நிகழ்ச்சி

Estimated read time 0 min read

 

சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பிப்ரவரி 16ஆம் நாளிரவு 8 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. கலசாரம், தொழில் நுட்பம், சர்வதேசப் பாணி ஆகியவை இந்நிகழ்ச்சியில் ஒன்றிணைக்கப்பட்டன. உலகளாவிய சீனர்களும், வெளிநாட்டு நண்பர்களும் இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசித்து, இனிமையாக வசந்த விழாவைக் கொண்டாடினர். அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, ஸ்பெயின், ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், பாடல், நடனம், அக்ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வழங்கினர்.

முதற்கட்ட புள்ளிவிவரங்களின்படி, 16ஆம் நாளிரவு 12 மணி வரை, இந்நிகழ்ச்சி 67.7 கோடி மக்கள் பார்வையிட்டு ரசித்தனர். புதிய சமூக ஊடகங்களில் 1350 கோடி முறையாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், வெளிநாடுகளின் சுமார் 4 ஆயிரம் ஊடகங்களில் இக்கலை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட 37.95 விழுக்காடு அதிகரித்துள்ளது. தவிரவும், வெளிநாட்டுச் சமூக ஊடகங்களில் இந்நிகழ்ச்சியின் பார்வைகள் 8 கோடியே 72 லட்சத்து 90 ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட சுமார் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author