உள்ளூர் நேரப்படி 22ஆம் நாளில், சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் நியூயார்க் கெனிடி பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அவர் ஐ.நா பேரவையின் 80ஆவது கூட்டத் தொடரின் பொது விவாதம் மற்றும் பிற உயர் நிலை நடவடிக்கைகளில் பங்கெடுக்கவுள்ளார்.
இதனிடையே, சீனத் தரப்பு நடத்தும் உலகளாவிய வளர்ச்சி முன்மொழி தொடர்பான உயர் நிலை கூட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அவர் பங்கெடுத்து, ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ், தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோருடன் முறையே சந்திக்கவுள்ளார்.
