AI இம்பாக்ட் சமிட் 2026: உலக தலைவர்கள் முன்னிலையில் இன்று பிரதமர் உரை  

Estimated read time 1 min read

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் ராஜதந்திர வலிமையை பறைசாற்றும் வகையில், புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் “இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026” (India AI Impact Summit 2026) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
“குளோபல் சவுத்” நாடுகளின் AI தலைநகராக இந்தியா உருவெடுத்துள்ளதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலை 9:15 மணிக்கு மாநாட்டிற்கு வருகை தரவுள்ள 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி நேரில் வரவேற்பார்.
அதனைத் தொடர்ந்து, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்கள் தொடக்க விழாவில் உரையாற்ற உள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
காலை 10:25 மணியளவில் பிரதமர் மோடி உலக தலைவர்கள் முன்னிலையில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author