இன்று 3 நாடுகள் பயணத்தைத் தொடங்குகிறார் பிரதமர் மோடி!

Estimated read time 1 min read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 6) முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
தனது இந்த 6 நாள் பயணம் இந்தியாவின் ‘Act East’ கொள்கை, ‘MAHASAGAR’ தொலைநோக்கு பார்வை மற்றும் சுதந்திரமான, உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் தனது புறப்பாடு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்தியாவின் கூட்டு முயற்சியே ‘மகாசாகர்’ (Mutual and Holistic Advancement for Security Across the Regions) தொலைநோக்கு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author