பிரெஞ்சு மொழி ஆசிரியர் பியன்கா லாலா என்பவர் தனது மாணவர் ஒருவரைப் பற்றிப் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு இந்தியத் தொழில்முனைவோர், சுவிட்சர்லாந்தில் தனது நிறுவனத்தைத் தொடங்கவிருப்பதாகக் கூறி, ஒரே நாளில் ஏழரை மணிநேரம் பிரெஞ்சு வகுப்புகளுக்குப் பதிவு செய்தார்.
அந்த மாணவர் அப்போதுதான் மொழியைக் கற்கத் தொடங்கியிருந்தார் என்பதைக் கேட்ட ஆசிரியர் பியன்கா, இவ்வளவு குறுகிய காலத்தில் இதைக் கற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்று அதிர்ச்சியடைந்தார். ஆனாலும், விடாமுயற்சியுடன் அந்த மாணவர் வாரக்கணக்கில் தினமும் பயிற்சி எடுத்தது பியன்காவையே வியக்க வைத்தது.
இந்த மாணவரின் அர்ப்பணிப்பையும் ஒழுக்கத்தையும் கண்டு வியந்த பியன்கா, “செயற்கை நுண்ணறிவைப் பற்றி கவலைப்படாதீர்கள், ஆகாஷ் போன்றவர்களைப் பார்த்துதான் பயப்பட வேண்டும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
A post shared by nationmatters (@nationmatters)
“>
இந்தியர்களின் இத்தகைய கடின உழைப்பும், இலக்கை அடையும் வேகமும் இணைய பயனர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. பொறியியல் பின்னணியைக் கொண்ட இந்தியர்கள் எந்தவொரு கடினமான விஷயத்தையும் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ளும் வல்லமை கொண்டவர்கள் என்றும், விடாமுயற்சிக்கு மாற்றே இல்லை என்றும் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
