அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு, நிர்வாக தகுதி இல்லை – பாலகுருசாமி விமர்சனம்!

Estimated read time 0 min read

அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு, நிர்வாக தகுதி இல்லை என்றும் அரசியல் தொடர்பு மட்டுமே ஒரே தகுதி எனவும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகம் சமீப நாட்களாக சந்தித்து வரும் பிரச்னைகளை, மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பதிவாளரின் தவறுகள், அலட்சியங்களுமே, இதற்கு காரணம் எனவும், போதிய அனுபவம் இல்லாததால், அவரால், மாணவர்கள், பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, புரிந்து கொள்ள இயலவில்லை எனவும் எந்த துறைகளுக்கும், தலைவராக பதவி வகிக்காத அவருக்கு, போதிய நிர்வாக அனுபவம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

அவருக்கு உள்ள ஒரு தகுதி அரசியல் தொடர்பு மட்டுமே என குறிப்பிட்டுள்ள பாலகுருசாமி, அவர் தி.மு.க., முன்னாள் அமைச்சரின் மருமகன் என தகவல்கள் கூறுகின்றன என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை, கல்வி நிறுவனத்தை சீர்குலைத்துவிடும் என்றும் இனியும், இது தொடர்ந்தால், பல்கலைக்கழகம் மேலும் சீர்குலைய வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author