ஈரானை தாக்கத் தயாராகும் அமெரிக்கா? இந்த வார இறுதியிலேயே போர் தொடங்க வாய்ப்பு?  

Estimated read time 1 min read

ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை என CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் விமானப்படை மற்றும் கடற்படை தளவாடங்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கை, கடந்த ஆண்டு நடைபெற்ற 12 நாள் மோதலை விட பெரிய அளவில் பல வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author