நாளை முதல் திமுக விருப்ப மனு விநியோகம் விண்ணப்ப கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Estimated read time 0 min read

தி.மு.க பொதுச்செயலரும், அமைச்சருமான துரை முருகன் அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், நாளை முதல், மார்ச் 2ம் தேதி வரை, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.

பொதுத் தொகுதிக்கு 25,000 ரூபாய், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு 15,000 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால், அவர்களின் விண்ணப்ப கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்.

விண்ணப்ப படிவத்தை தலைமை அலுவலகத்தில், 1,000 ரூபாய் வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை பகிர்ந்து அளிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பம் அளித்தவர்கள் செலுத்திய கட்டணம் பின்னர் திருப்பி தரப்படும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் விருப்ப மனு அறிவிப்பால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். எனவே நாளை முதல் அண்ணா அறிவாலயம் தி.மு.க. வினர் கூட்டத்தால் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author