வேலூரில் மார்ச் 7-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் – கார்த்தியாயினி

Estimated read time 0 min read

வேலூரில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தெரிவித்துள்ளார்.

பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கு இடம் தேர்வு செய்வதற்காக நேற்று மாலை பாஜக மாநில துணைத்தலைவர் கரு, நாகராஜன், பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி பாஜக மாவட்ட தலைவர் தசரதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வேலூர் கோட்டை மைதானத்தை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தியாயினி, பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திரல் 1,50,000 பேர் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

You May Also Like

More From Author