சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக சாதனைக்கு வெளிநாட்டு பிரமுகர்கள் பாராட்டு

Estimated read time 0 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆம் ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒளிவீசும் பயணத்தை மீளாய்வு செய்ததோடு, இக்கட்சியின் ஈடிணையற்ற சிறப்பு பண்புகளையும் விளக்கிக் கூறினார். சமீபத்தில் பல நாடுகளின் அரசியல்வாதிகள், அறிஞர்கள் ஆகியோர் புறநிலை கண்ணோட்டம் மற்றும் சொந்த அனுபவங்களிலிருந்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக சாதனையைப் புகழ்ந்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமுறையை ஆராய்ந்து விளக்கியதோடு, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கலின் உயிராற்றலையும் அதன் உலகளாவிய மதிப்பையும் பாராட்டினர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது 100 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தில் பல வளர்ச்சி அதிசயங்களை படைத்துள்ளது என்று லாவோஸ் மக்கள் புரட்சி கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணைத் தலைவர் காமோன் சாந்தச்சிட் கூறினார்.

ஆப்கான் தலைமை அமைச்சர் மாளிகையின் ஊடக பொறுப்பாளர் அந்திஹ்மன் கூறுகையில், வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, இயற்கைச் சூழல் பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம், அண்டை நாடுகளுடனான நட்புறவு உள்ளிட்ட துறைகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

ஆட்சிபுரிதலில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறைகள் சர்வதேச சமூகத்துக்கு, குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு மாதிரிகளை வழங்கியுள்ளது என்று பல நாடுகளின் பிரமுகர்கள் பேட்டி அளித்த போது குறிப்பிட்டனர்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் வீரசிங்கே கூறுகையில், சீனாவின் ஜனநாயக மையத்துவ அதிகாரம், மையத்துவ அதிகாரத்தின் திறன்மிக்க கொள்கை முடிவை நனவாக்குவதோடு, பொது மக்கள் கருத்துக்களையும் முழுமையாக சேகரிக்க முடிகிறது. நாட்டின் வளர்ச்சியை இது ஊக்குவிப்பதுடன் பல்வேறு நாடுகளுக்கு சீனாவின் தீர்வுமுறையை வழங்குகிறது என்று தெரிவித்தார். வங்கதேசத்தின் செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை தலைவர் சஹிர் கூறுகையில், சீனாவின் வெற்றிகரமான வளர்ச்சி அனுபவங்களைப் பயன்படுத்தி, சீனாவுடன் இணைந்து பரந்த வளரும் நாடுகளுக்குத் தலைமை தாங்கி, சர்வதேச அளவில் உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலை மேலும் ஒலிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author