PRS01: தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்! மமிதா பைஜு, அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவான ‘PR Show’ முதல் படம்  

Estimated read time 1 min read

‘லவ் டுடே’ புகழ் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், தற்பொழுது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிஆர் ஷோ’ அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, அதன் முதல் தயாரிப்பான ‘PRS01’ திரைப்படத்தின் பிரம்மாண்ட அறிமுக வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, இதனை ஒரு இயக்குநர் அல்லாமல் 6 இளம் இயக்குநர்கள் இணைந்து இயக்கவுள்ளனர்.
‘ஆல்ஃபா யூனிட்’ என்று அழைக்கப்படும் இந்த இயக்குநர் குழுவில் விஷால் டிஆர், யாஷ் வி, நரேன் சௌதா, சாணக்கியன் ஆர், தனுஷ் குமார் மற்றும் இளம்பரிதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இப்படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதனே எழுதியுள்ளார்.

You May Also Like

More From Author