மாநாட்டை கொடியேற்றி தொடங்கிவைத்த ராமதாஸ், அன்புமணி!

Estimated read time 0 min read

சித்திரை முழு நிலவு மாநாடு மேடைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் ஒன்றாக வந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு வன்னியர் எழுச்சி பெருவிழா மாநாடு நடைபெற்றுவருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாநாட்டு திடலுக்கு ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

50 ஏக்கர் பரப்பரவில் நடைபெறும் இந்த மாநாட்டில் 3 லட்சம் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தத்திற்கு 150 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு மேடையில் ஒன்றாக தோன்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் கொடியேற்றி சித்திரை முழு நிலவு மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

You May Also Like

More From Author