31வது ஷாங்காய் தொலைக்காட்சி விழாவின் மக்னோலியா விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. சீன ஊடக குழுமம் வெளியிட்ட பணத்தின் அற்புதமான கதை என்ற ஆவணப்படம் ஏற்பாட்டுக் குழுவின் சிறப்பு விருதை வென்றுள்ளது.
இந்த ஆவணப்படம், சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொல்பொருள் தளங்களை ஆராய்ந்து, தொல்பொருள் கண்டுபிடிப்பு, தொல்பொருள் ஆராய்ச்சி, வரலாற்று தளங்கள் ஆகியவற்றின் மூலம், நாகரிகங்களுக்கு இடையிலான பரிமாற்றம் மற்றும் பரஸ்பரக் கற்றல் கதைகளைக் காட்டுகிறது.
சீனாவும் பிரான்ஸும் கூட்டாக தயாரித்த இந்த ஆவணப்படம், நாகரிகங்களுக்கு இடையிலான பரஸ்பரக் கற்றல் மற்றும் கூட்டு வளர்ச்சி என்பதை கருபொருளாக கொண்டு, சர்வதேச பார்வையாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், உலகப் பொருளாதார அமைப்பின் உருவாக்கத்தில் சீனாவின் முக்கிய பங்கை வெளிப்படுத்துகிறது.
