”நான் செத்துட்டா என் பொண்டாட்டிய யார் பார்த்துப்பா?” – விபரீத பயத்தில் மனைவியை கொன்ற ஓய்வுபெற்ற ‘இஸ்ரோ’ அதிகாரி….!! 

Estimated read time 1 min read

பெங்களூரு ஆவலாஹள்ளி பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற இஸ்ரோ (ISRO) அதிகாரி நாகேஸ்வர ராவ், தனது மனைவி சந்தியா ஸ்ரீயை துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவையே அதிரவைத்துள்ளது.

65 வயதான அவர், நீண்ட நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்த பிறகு தற்கொலை செய்ய எண்ணிய அவர், பின்னர் தனது தெரிந்த ஒருவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, போலீஸார் விரைந்து வந்து அவரைக் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் சொன்ன காரணம் போலீஸாரையே கலங்க வைத்துள்ளது. தனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அருகில் இல்லை என்றும், தான் இறந்துவிட்டால் தனது மனைவி அனாதையாகத் தவிப்பார் என்ற பயத்திலுமே அவரைக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர்களது ஒரே மகள் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், முதியவர்களின் மனநலம் மற்றும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author