டைம்ஸ் தரவரிசையில் அதிக கல்வி நிறுவனங்கள் இடம் பெற்ற நாடாக உருவெடுத்தது இந்தியா  

Estimated read time 1 min read

டைம்ஸ் உயர் கல்வி (THE) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பல்துறை அறிவியல் தரவரிசையில் (Interdisciplinary Science Rankings – ISR) 88 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
இதன் மூலம் உலகளாவிய பட்டியலில் அதிக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தத் தரவரிசை, பாரம்பரிய கல்வி எல்லைகளைத் தாண்டி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளைப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு ஊக்குவிக்கின்றன என்பதை அளவிடுகிறது.
ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தத் தரவரிசையைப் புறக்கணித்து வரும் நிலையிலும், சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் உலகளவில் 57வது இடத்தைப் பிடித்து இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.
அதைத் தொடர்ந்து விஐடி பல்கலைக்கழகம் 59வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் கூட்டு 67வது இடத்தையும் பெற்றுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author