கோடை வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை குளிர்வித்து வருகிறது.
இதுகுறித்து இன்று (ஏப்ரல் 5) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சுமார் 0.5 கிமீ உயரத்தில் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாகத் தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகுறித்த விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை!
