ஐபிஎல் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில், குஜராத் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது.
அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் வீரர் துருவ் ஜொரேல் 42 பந்துகளில் 75 ரன்களையும், ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 55 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய குஜராத் வீரர் சாய் சுதர்சன் 44 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு வெற்றிபெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு குஜராத் அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
