ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி.,) குரூப் டி தேர்விற்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தமாக 22,195 காலிப்பணியிடங்களுக்கு https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இக்காலிப் பணியிடங்களுக்கு 02.03.2026-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500-ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூபாய் 250 ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி ஆகும். விண்ணப்பதாரர்கள் 01.01.2026-ம் நாளன்று 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
இத்தேர்வுகள் கணினி அடிப்படையிலும், உடல் திறன் சோதனை/ மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையிலும் நடைபெறும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட தமிழ் மொழியிலும் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, பொது அறிவு, அறிவியல், கணிதம் ஆகியவற்றிலிருந்து 100 கேள்விகள் கொள்குறி வகையில் கேட்கப்படும். தேர்வுக்கான விரிவான பாடத்திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பைப் பார்க்கவும்.
சென்னை : சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/sRVKQJ2QUFj6rxLn7 என்ற கூகுள் படிவத்தில் நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் studyhall வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாடகுறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலைநாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள். மேலும், விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி.,) குரூப் டி எழுத்து தேர்வு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் 24.02.2026 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
மேலும், விவரங்களுக்கு 04151 – 295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இராணிப்பேட்டை : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பு அலுவலக வேலைநாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04172-291400. deoranipet.studycircle@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் மற்றும் இடம். எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம், இராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையம், (தலைமை தபால் நிலையம் அருகில்) நேரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருவள்ளூர் : 16.02.2026 திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வார நாட்களில் நடத்தப்படுவதுடன் இலவச மாதிரி தேர்வுகளும் மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.
தகுதியுள்ள போட்டித் தேர்வாளர்கள் 8489866698, 9626456509 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தேர்வு குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகலை விண்ணப்பத்துடன் இணைத்து நேரில் சென்று கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
சேலம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
நீலகிரி : மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பயிற்சி மையத்திலும், பந்தலூரில் செயல்படும் TEWS மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் பயிற்சி மையத்திலும் 14.02.2026 முதல் நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள ஆர்வலர்கள், இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்ததற்க்கான ஆவணங்களுடன், இவ்வலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்தோ அல்லது 0423-2444004 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 7200019666 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
