கோவையில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!

Estimated read time 1 min read

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 24ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

10ம் வகுப்பு, +2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களது கல்விச் சான்றுகளின் நகல்களுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம். பல் வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் இதில் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இதில், கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைதேடும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642388 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஐ.ஏ.எஸ். அறிவித்துளளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author