தேர்தல் 2026: தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்கும் திமுக?  

Estimated read time 0 min read

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை தக்கவைத்து கொள்ள ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த முறை புதிய கட்சிகளின் வருகையாலும், தற்போதைய கூட்டணி கட்சிகளின் கூடுதல் எதிர்பார்ப்புகளாலும் திமுக தனது சொந்தத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளில் போட்டியிட்டது (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால் 188).
ஆனால், இந்த முறை புதிய வரவுகளான தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் சில சிறிய கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டியிருப்பதால், திமுக நேரடியாக 165 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

You May Also Like

More From Author