இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு இன்று ஆற்காட்டில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் பாடகரான தேவா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. நேற்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தேவா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். மனசுக்கேத்த மகராஜா என்ற திரைப்படத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா.

1990-ம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பல கானா பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார். அவருடைய கானா பாடல்கள் இளசுகளை ஆட்டம் போட வைத்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த தேவா மறைவுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அவருடைய உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இசை உலகிற்கு ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அவருடைய உடல் சொந்த ஊரான, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடுக்கு கொண்டு செல்லப்படும். ஆற்காட்டில் இன்று மதியம் 1 மணி அளவில் தேவாவின் இறுதிச்சடங்கு நடைபெறும்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தேனிசைத் தென்றல் தேவாவின் மகனும், இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா, “காலை தனது தந்தை தேவாவிற்கு நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மருத்துவமனையில் தனது தந்தைக்கு சிகிச்சை அளித்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை.

தனது தந்தையின் மறைவு குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இறுதிச்சடங்கு ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் நாளை அதாவது இன்று (அக்.18) மாலை 4 மணியளவில் உடல் நல்லடக்கம் செய்யப்படும். தேவாவின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author