அடி ஆத்தி இவ்வளவு ஸ்பீடா..? டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த பரபரப்பு… வைரலாகும் அதிர்ச்சி காணொளி..! 

Estimated read time 1 min read

டெல்லியிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானம், பறவை மோதிய விபத்து காரணமாக திடீரெனத் தாமதமானது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, EK 517 என்ற எண் கொண்ட இந்த விமானம் இன்று மாலை 4:25 மணி அளவில் டெல்லியிலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், திடீர் விபத்து காரணமாக விமானத்தின் புறப்பாடு நேரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையப் பகுதியில் பறவைகள் மோதும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள குப்பை கொட்டும் இடங்கள் மற்றும் பறவைகளைக் ஈர்க்கும் காரணிகளால் இதுபோன்ற சம்பவங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக பிரபல நாளிதழ் சமீபத்தில் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட EK 517 விமானத்தின் பயணிகள், தங்களது விமானத்தின் தற்போதைய நிலை மற்றும் திருத்தப்பட்ட புறப்பாடு நேரம் குறித்த விவரங்களை அறிய எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author