தீபாவளிக்கு டாஸ்மாக் அதிரடி! ரூ.250-க்கு வரப்போகும் 4 புதிய பிரீமியம் பீர் ரகங்கள்..!

Estimated read time 0 min read

டாஸ்மாக் மதுபான கடைகளிலும் அதன் எலைட் கடைகளிலும் மதுபான தயாரிப்புகள் விற்கப்படுகின்றன. உள்ளூர் மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, பீர் வகைகள், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் பீர் வகைகள் 17 ரகங்கள் தற்போது விற்பனையில் உள்ளன. கிங்பிஷ பிரிட்டீஷ் எம்பயர், எஸ்.என்.ஜே. 10000, ஸ்பீல் ட்ரிபிள் ஸ்ட்ராங், பிளாக் பேர்ல், டியுபார்க் கார்ல்ஸ்பெர்க், பட்வைசர், ஹேவர்ட்ஸ் 5000, காட்பாதர், பூம், மேக்ஸ் 11000, ஜிங்காரோ, கல்யாணி பிளாக் லேபிள், புல்லட், வுட்பெக்கர், பிளாக் பஸ்டர் ஆகிய ரகங்கள் விற்பனையில் உள்ளன.

இந்தநிலையில் டாஸ்மாக் நிறுவன போர்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையின்போது மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது புதிதாக 20 வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. அதில் 4 வகையான பீர்களும் அடங்கும். பிர்ரா, கர்நாடகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள ஹெய்னஹென் சில்வர், சத்தீஸ்கரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிம்பா ரோர், லோன் உல்ப் ஆகியவையாகும்.

இதன் ஆரம்ப விலை குறைந்தபட்சம் ரூ.250 ஆக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளியையொட்டி அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் ரகங்கள் எலைட் மதுபான கடைகளில் கிடைக்கும். இதற்கான அனுமதியை அரசு வழங்கியதும் இறக்குமதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு தற்போது 21 வகையான பீர் வகைளும், ஏழு வகையான இதர மதுபானங்களும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு வரும் நிலையில், இனி பீர் வகைகள் 25 ஆக உயரவிருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author