தேவா அப்பாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..!

Estimated read time 1 min read

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு இயக்குநர் சுந்தர்.சி, ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி தனது சமூல வலைதளத்தில் தேவாவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின் போதும், வெளியீட்டின் போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை.

சமீப காலத்தில் அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எந்தவித பின்புலமும் இல்லாமல் கலைத்துறையில் நுழைந்து மிகப்பெரிய வெற்றிச் சிகரங்களைத் தொட்டு ஏராளமானோருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஒருவரை தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது.

எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுச் சேர்த்த மாபெரும் கலைஞரான தேவா என்றென்றும் நினைவுக் கூறப்படுவார். தேவா அப்பாவின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், ரசிகர்களில் ஒருவனாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author