உலகையே அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் தலைவன் கொலை! யார் இந்த எல் மெஞ்சோ?  

Estimated read time 1 min read

மெக்சிகோவின் மிகப்பலவாய்ந்த ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) அமைப்பின் தலைவனும், உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவனுமான ‘எல் மெஞ்சோ’ (நெமேசியோ ஒசெகுவேரா செர்வான்டெஸ்), ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜாலிஸ்கோ மாகாணத்தில் நடைபெற்ற ஒரு ரகசிய ராணுவ தாக்குதலில் எல் மெஞ்சோ படுகாயமடைந்தார்.
அவரை மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தை தொடர்ந்து, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.
எல் மெஞ்சோவைப் பிடித்துத் தருபவர்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author