2025ஆம் ஆண்டில் சீனாவின் மென்ரகத் தொழிற்துறை வளர்ச்சி

தொடர்புடைய தரவுகளின்படி 2025ஆம் ஆண்டில், சீனாவின் மென்ரகத் தொழிற்துறையின் பொருளாதாரம் ஒட்டுமொத்த அளவில் நிதானமாக இயங்கி வருகிறது. இதில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய மென்ரகத் தொழில் நிறுவனங்களின் கூட்டு அதிகரிப்பு அளவு, 2024ஆம் ஆண்டில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் கணக்கிடும் 90 முக்கிய மென்ரகத் தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்களில் 35 வகை உற்பத்திப் பொருட்களின் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளது. இதில் ஸ்கூட்டர்களின் உற்பத்தி அளவு, 2024ஆம் ஆண்டை விட 21.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. சூரிய ஆற்றல் மின்கலன்களின் உற்பத்தி அளவு, 2024ஆம் ஆண்டை விட 7.6 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மென்ரகத் தொழிற்துறையில் ஏற்றுமதி செய்யப்பட்ட 22 வகை பொருட்களில் 11 வகைகளின் ஏற்றுமதி தொகை, 2024ஆம் ஆண்டை விட குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது. இதில், மின்கலன் மற்றும் மின்கலன்களின் உதிரிப்பாகங்களின் ஏற்றுமதித் தொகை 8473 கோடி அமெரிக்க டாலருடன், 2024ஆம் ஆண்டை விட 22.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author