“உள்ளூர் திருவிழாக்கள் முடிந்த பின்னர் தேர்தல்”- தலைமை தேர்தல் ஆணையர்

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் 12 கட்சி நிர்வாகிகளுடன் ஆலொசனை நடத்தினார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என என்னிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ளூர் திருவிழாக்களை கணக்கில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என்றார்.

You May Also Like

More From Author