ஜப்பானின் தலைமை அமைச்சர் யிஷிபா ஷிகெரு ஆகஸ்ட் 15ம் நாள் நிகழ்த்திய உரையில், ஆசியாவின் பல நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு நடத்திய பொறுப்பைக் குறிப்பிட வில்லை. அதோடு, அன்று அவர் யசுகுனி கல்லறைக்கு அஞ்சலி செலுத்தி காணிக்கை கொடுத்தார்.
இந்த செயல்கள், சர்வதேச சமூகத்தில் பரந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளன. இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 11ஆயிரத்து 913 மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
ஜப்பானிய படைகள் நடத்திய குற்றங்களை, ஜப்பான் சமூகம் மறுத்து, தன்னைப் பாதிக்கப்பட்ட நாடாகக் கூறும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஜப்பான், வரலாற்றின் படிப்பினைப் பெறாமல், தொடர்ந்து ராணுவச் சக்தியை விரிவாக்குவது, சர்வதேச சமூகத்தில் கோபம், கவலை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு பிரச்சினைகள் மீது ஜப்பான் அரசின் தவறான மனப்பான்மைக்கு, கருத்து கணிப்புக்குள்ளானவர்கள் மனநிறைவின்மை தெரிவித்தனர். ஜப்பான் அரசியல்வாதிகள் யசுகுனி கல்லறையில் அஞ்சலி செலுத்தியதை 64.4 விழுக்காட்டினர் எதிர்க்கின்றனர்.
ஜப்பான் அரசு, போரில் பாதிக்கப்பட்ட நாடுகளிடமிருந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று 65.7 விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்தனர்.
