இந்தியாவில் விமான பயணங்களை மேற்கொள்வோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தலைவலி, டிக்கெட் ரத்து செய்யும் போது பிடிக்கும் அதிகப்படியான கட்டணம் ஆகும்.
இதனைச் சரிசெய்யும் வகையில், டிஜிசிஏ(DGCA) டிக்கெட் ரீஃபண்ட் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
புதிய விதிகளின்படி, பயணிகள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி அதனை ரத்து செய்யலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம். (குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு).
கடந்த டிசம்பர் 2025-ல் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட செயல்பாட்டுச் சிக்கல்களின் போது, ஆயிரக்கணக்கான பயணிகள் ரீஃபண்ட் பெற முடியாமல் தவித்தனர்.
இது போன்ற புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்தே, பயணிகளுக்கு சாதகமாக இந்த விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
விமானப் பயணிகளே! 48 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் ஃபைன் கிடையாது
