புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026’ (India AI Impact Expo 2026) கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 16) மாலை 5 மணியளவில் தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி 16 முதல் 20 வரை ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச நிகழ்வு, ‘இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டின்’ (India AI Impact Summit) ஒரு முக்கிய அங்கமாகும்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் எவ்வாறு உலகை மாற்றப்போகிறது என்பதை விளக்கும் ஒரு தேசிய செயல்முறை விளக்கமாக இக்கண்காட்சி அமைந்துள்ளது.
இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
