2026ம் ஆண்டின் இரு கூட்டத்தொடர்களின் ஊடக மையப் பயன்பாடு தொடக்கம்

 

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாளன்றும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாளன்றும் பெய்ஜிங்கில் துவங்க உள்ளன. இந்நிலையில் இரு கூட்டத்தொடர்களுக்கான ஊடக மையம், பிப்ரவரி 27ம் நாள் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வருகிறது. இதுவரை, சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3000க்கும் மேலான செய்தியாளர்கள், இரு கூட்டத்தொடர்களின் பேட்டிக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஹாங்காங், மக்கௌ, தைவான் மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் எண்ணிக்கை, ஆயிரத்துக்கும் மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author