கடந்த சில தினங்களாகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தைகள், இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத் தொடக்கத்திலேயே அசாத்திய மீட்சியைக் கண்டு காளைகளின் ஆதிக்கத்திற்குத் திரும்பியுள்ளன.
சர்வதேசச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நகர்வுகள் காரணமாக முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்ததே இந்தத் திடீர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் (Sensex) 356.67 புள்ளிகள் அல்லது 0.49 சதவீதம் உயர்ந்து 73,880.93 புள்ளிகளாக வர்த்தகமானது.
சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை! சென்செக்ஸ் 73,880, நிஃப்டி 23,237 ஆக உயர்வு!
