ஜலாலாபாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம்: உயிருடன் பிடிபட்ட விமானி  

Estimated read time 0 min read

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆப்கான் ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜலாலாபாத்தின் ஆறாவது மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானம் வீழ்வதற்கு முன்னதாக, அதிலிருந்த விமானி பாராசூட் மூலம் குதித்ததை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர்.
தரை இறங்கிய அந்தப் பாகிஸ்தான் விமானியை ஆப்கான் படைகள் உயிருடன் சிறைபிடித்துள்ளன.
ஆப்கான் படைகளின் துல்லியமான தாக்குதலே இதற்குக் காரணம் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தயேப் ஹம்மாத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author