எரிசக்தி ஒத்துழைப்பில் இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் நடத்திய கூட்டத்தில் பேசிய லாவ்ரோவ், இந்திய சந்தைக்கு ரஷ்ய எண்ணெய் விநியோகத்தில் இரு நாடுகளும் சிறந்த முடிவுகளை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் எரிசக்தி வளங்களை பிரித்தெடுப்பது உள்ளிட்ட கூட்டு எரிசக்தி திட்டங்களில் இணைந்து செயல்பட பரஸ்பர ஆர்வம் இருப்பதாக ரஷ்ய அமைச்சர் வலியுறுத்தினார்.
ரஷ்ய எரிபொருள் வாங்குவது தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்காவிலிருந்து அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மூலோபாய கூட்டாண்மைக்கான முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவுடன் எரிசக்தியில் கூட்டாக இணைந்து செயல்பட ரஷ்யா ஆர்வம்
