அமெரிக்காவே சர்வதேச அணு ஒழுங்கு மற்றும் உலக உத்திநோக்கு நிலைத்தன்மைக்கான மிகப்பெரிய உறுதியற்ற மூலம்

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் சியாவ்காங் பிப்ரவரி 28ஆம் நாள் இராணுவம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சீனா 2020ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் அணு வெடிப்பு சோதனையை மேற்கொண்டதாக சமீபத்தில் அமெரிக்கா பலமுறை குற்றஞ்சாட்டியதோடு, பூச்சியம் விளைவு எனும் தரநிலையை ஒரு சார்பாக பின்பற்ற போவதில்லை என்றும் தெரிவித்தது.

இது குறித்து ஜாங் சியாவ்காங் கூறுகையில், அமெரிக்காவின் கூற்று முற்றிலும் ஆதாரம் இல்லை. அனைவரும் அறிந்தவாறு, அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாத கொள்கையை சீனா கடைப்பிடித்து, எப்போதுமே தனது அணு திறன்களை நாட்டின் பாதுகாப்புக்கான குறைந்தபட்ச அளவில் நிலைநிறுத்துகிறது. எந்த நாட்டுடனும் எந்த அணு ஆயுதப் போட்டியிலும் சீனா ஈடுபடவில்லை. அணு சோதனையின் இடைநீக்கத்தைப் பின்பற்றும் சீனா, பன்முக அணு சோதனை தடை உடன்படிக்கையை மீறிய நடவடிக்கையை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், உலகளவில் மிகப்பெரிய அணு ஆயுத கிடங்கை கொண்டுள்ள அமெரிக்கா, அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் கொள்கையைப் பின்பற்றுகிறது. அணு திறன் கட்டுமானத்தில் பெரும் முதலீடு செய்துள்ள அமெரிக்கா, அணு சோதனையை மீண்டும் தொடங்குவதாக கூறியுள்ளது.

அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தங்களை மீறி, அவற்றிலிருந்து வெளியேறிய அதன் எதிர்மறையான செயல்களால், சர்வதேச அணு ஒழுங்கு மற்றும் உலக உத்திநோக்கு நிலைத்தன்மைக்கான மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக அமெரிக்கா விளங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author