எரிபொருள் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியாவின் ‘பிளான் பி’!  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் இணைந்து அவசரகாலத் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10% உயர்ந்தும், இயற்கை எரிவாயு விலை 40% க்கும் அதிகமாக அதிகரித்தும் உள்ள நிலையில், இந்திய அரசு பல்வேறு மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறது.
உள்நாட்டுத் தேவையை முன்னிலைப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளை சார்ந்திருக்காமல் ரஷ்யாவிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author