தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கோஞ்ச் நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 10:24 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கெராஷ் நகருக்கு வடமேற்கே 55 கி.மீ தொலைவில் இதன் மையம் அமைந்திருந்தது.
இது மிதமான நிலநடுக்கம் என்பதால், பெரிய அளவிலான கட்டிடச் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
ஈரான் நில அதிர்வு அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
