விளிம்பு நிலை மக்களுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு  

Estimated read time 0 min read

சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு “நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதி”யாக ரூ. 2,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிதி இன்று காலை முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்துடன் இந்த ரூ. 2,000 சிறப்பு நிதியும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
முதியோர் மற்றும் கைம்பெண்கள்: மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,200 (வழக்கமான ரூ. 1,200 + சிறப்பு நிதி ரூ. 2,000).
மாற்றுத்திறனாளிகள்: 5.92 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,500(வழக்கமான ரூ. 1,500 + சிறப்பு நிதி ரூ. 2,000).

Please follow and like us:

You May Also Like

More From Author