அரிய மண் தாதுக்கள் உள்ளிட்டபொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கை, சீனா சட்டத்தின்படி ஏற்றுமதி
மேலாண்மை அமைப்பு முறையை மேம்படுத்தி மேற்கொள்ளும் நியாயமான செயலாகும் என்றும்,
ஏற்றுமதிக் கட்டுபாடு என்பது ஏற்றுமதித் தடை அல்ல என்றும் சீன வணிக அமைச்சகத்தின்
செய்தித் தொடர்பாளர் ஒருவர் 14ஆம் நாள் தெரிவித்தார்.
சீனாவின் மீது கூடுதல் வரி வசூலிப்பு
முதலிய தடை நடவடிக்கைகளை அமெரிக்கா அண்மையில் அறிவித்ததைக் குறித்து செய்தியாளரின்
கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்கா, ஒரு பக்கத்தில்
பேச்சுவார்த்தையை நடத்த கோருவதோடு, மற்றொரு பக்கத்தில் மிரட்டல் விடுத்து புதிய
தடை நடவடிக்கைகளை வெளியிடவும் கூடாது. அமெரிக்கா தனது தவறான செயல்களைக் கூடிய
விரைவில் நிறுத்தி நல்லெண்ணத்தைக் காட்டிச் சீனாவுடன் இணைந்து ஒரே திசையை நோக்கி
செயல்பட வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.