தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில் வளாகத்தின் அருகே உள்ள கடல் இன்று கிட்டத்தட்ட 500 அடிக்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவில் அருகே உள்ள நாழி கிணறு பகுதியிலிருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 அடிக்கு கடல் நீர் உள்வாங்கியது.
இதனால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரியத் தொடங்கின.
இதனால் பக்தர்கள் அனைவரும் கடலுக்குள் இறங்க பயந்துள்ளனர்.
இது குறித்து விவரம் அறிந்தவர்கள், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்குவது எப்போதும் நடப்பது தான் எனவும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் கூறினார்.
எனினும் பொதுமக்கள் பாறைகள் மீது ஏறி புகைப்படங்கள் பிடிக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.