இன்று கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா..கோவையில் போக்குவரத்து மாற்றம்..!

Estimated read time 1 min read

.கோவையின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா, இன்று மார்ச், 4ம் தேதி கோலாகலமாக நடக்க உள்ளது.

கோனியம்மன் திருக்கோவில் தேர்த் திருவிழா நடைபெற இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதியம் 2.05 மணியளவில் தேரோட்டம் தொடங்குகிறது. தேரோட்ட நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். தேரோட்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பதால் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்கடம் ஒப்பணக்கார வீதி, பேரூர் ரோடு, ராஜ வீதி வைசியாள் வீதி சுக்கிரவார்பேட்டை தெலுங்குவீதி செட்டிவீதி மற்றும் சலிவன் வீதி பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1. பேரூர் ரோடு :

பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக, நகருக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. மாற்றாக, பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில், வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா, பேரூர் பைபாஸ் ரோடு. உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

(ii) பெரிய கடை வீதி, NH ரோடு, வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் ராஜா தியேட்டர் வழியாக சென்று உக்கடம் ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேத்துமாவாய்க்கால் செக் போஸ்ட் வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2 மருதமலை, தடாகம் ரோடு

(i) மருதமலை ரோடு, தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி வழியாக ராஜ வீதிக்கு வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. மாற்றாக, தடாகம் சாலை, காந்தி பார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிலாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

(ii) உக்கடத்திலிருந்து, ஒப்பணக்காரவீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட் சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னய்யராஜபுரம், சென்று தடாகம் சாலையில் செல்லலாம்.

(iII) சுக்கிரவார்பேட்டை சாலையிலிருந்து, தியாகி குமரன் வீதி வழியாக, ராஜ வீதிக்கு, வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.

(iv) கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மார்ச் 4 ஆம் தேதி காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது.

(v) தேர்த் திருவிழா நடைபெறும் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, K.G. வீதி ஆகிய சாலைகளில் மார்ச் 4 ஆம் தேதி காலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author