சீன ஊடக குழுமத்தின் விளக்கு விழா கலை நிகழ்ச்சி

Estimated read time 1 min read

சீன ஊடக குழுமத்தின் விளக்கு விழா கலை நிகழ்ச்சி மார்ச் 3ஆம் நாள் இரவு 8 மணி நேரலை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை சூழ்நிலையை முன்னிலைப்படுத்தி, ஆடல் பாடல், இசை நாடகம் உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகளின் மூலம் உலகளாவிய சீனர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் சீன விளக்கு விழாவின் அற்புதமான விருந்தை வழங்குகிறது.

மேலும், பல்வேறு உருவ விளக்குகளை பார்வையிடுதல், விடுகதை விளையாட்டுகள், டாங்யுவான் என்ற சிறப்பு இனிப்பு சமைத்தல் ஆகியவை சீன விளக்கு விழாவுக்கான நாட்டுப்புற பழக்கவழக்கங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கிளை அரங்குகளில் உள்ளூர் கலாச்சாரங்கள் விளக்கு விழாவுக்கான சிறப்பு கூட்டத்துடன் இணைந்து வழங்கும் தனிச்சிறப்புடைய விழாக்கால ஓவியம் காணப்படலாம்.

 

You May Also Like

More From Author