சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஜனவரி 8ஆம் நாள், ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகத்தில் ஆபிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் யூசோஃபுடன் 9ஆவது சீன-ஆபிரிக்க நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 13 ஆண்டுகளாக, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஆபிரிக்க ஒன்றியத்தின் உச்சி மாநாட்டுக்குத் தொடர்ந்து வாழ்த்து செய்தி அனுப்பினார். ஆபிரிக்க ஒன்றியத்துடனானா உறவை வளர்ப்பதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகின்றது. சொந்த வளர்ச்சியின் மூலம், ஆபிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு உதவி அளித்து, நவீனமயமாக்கத்தை கூட்டாக நனவாக்கி, தெற்குலக நலன்களைப் பேணிக்காக்க சீனா விரும்புகின்றது. சீன-ஆபிரிக்க ஒத்துழைப்பு மன்றம், இருதரப்புகளின் கூட்டு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்மொழிந்த உலக ஆட்சி முறை முன்மொழிவுக்கு ஆபிரிக்க ஒன்றியம் முதல் நேரத்தில் ஆதரவு அளித்தது. உலகம் பற்றிய 4 முக்கிய முன்மொழிவு துறைகளில், ஆபிரிக்க ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையையும் பரிமாற்றத்தையும் வலுப்படுத்த சீனா விரும்புகின்றது என்றார்.
