நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்  

நவி மும்பையில் இன்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக்கொண்டனர்.
மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஷாபாஸ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அந்த கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர்களிடம் பேசிய நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே, இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவித்தார்.
2 பேர் மீட்கப்பட்டதாகவும், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author