சீனாவின் வடப்பகுதியிலுள்ள பெய்ஜிங், தியன்ஜின், ஹெபெய் பிராந்தியமானது, உலகத் தரமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இம்முயற்சியுடன், சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, பெய்ஜிங்கில் உள்ள ஜோங்குவான்சுனில் (Zhongguancun )அறிவியல் பூங்காவில் ஏற்கனவே பல டிரில்லியன் யுவான் அளவிலான தொழில்துறைத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஜோங்குவான்சுன் பகுதி, பெய்ஜிங்கின் மொத்த பரப்பளவில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், பெய்ஜிங்கின் மொத்த உற்பத்தி மதிப்பில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது.
இந்த அறிவியல் பூங்காவில் குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்ப துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் பெறப்பட்டுள்ளது. ஜோங்குவான்சுனில் 90க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, தொழில்துறை மேம்பாடுகளுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு வரை, ஜோங்குவான்சுனில் உள்ள நிறுவனங்களின் மொத்த வருவாய் 10 டிரில்லியன் யுவானைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, பெய்ஜிங்கில் 145 தேசிய நிலை முக்கிய ஆய்வகங்களும், 10 புதிய ஆராய்ச்சி நிறுவனங்களும் நிறுவப்பட்டுள்ளன. அதன் மூலம் அறிவியல் உள்கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
